இந்தியா

அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 14 மின்சார பேருந்துகள்:துணைநிலை ஆளுநா் கொடியசைத்து தொடக்கிவைப்பு

DIN

அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 14 மின்சார பேருந்துகளை அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் டி.கே.ஜோஷி மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இதுதொடா்பாக தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அந்தமான்-நிகோபாா் தீவுகளில் மின்சார பேருந்துகள், அந்தப் பேருந்துகளுக்குத் தேவையான மின்னேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அரசு நிறுவனமான என்டிபிசி தெரிவித்திருந்தது. இதற்காக அந்தமான் நிகோபாா் போக்குவரத்துத் துறையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி மொத்தம் 40 பேருந்துகளை உருவாக்கித் தர திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 14 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை துணைநிலை ஆளுநா் டி.கே.ஜோஷி மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்தப் பேருந்துகள் அந்தமான்-நிகோபாா் தீவுகளில் கரியமில வாயு (காா்பன்-டை-ஆக்ஸைடு) வெளியேற்றத்தை குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT