இந்தியா

குடியரசு தினக் கலவரத்தில் 300 காவலர்களுக்கு காயம்: தில்லி காவல்துறை

DIN

குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் 300 காவலர்கள் படுயாகமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் 11 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று தில்லி வெளிவட்டச் சாலையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

எனினும் சாலைகளில் பேருந்துகள், பேரிகார்டுகளை அமைத்து காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். அதனை மீறி விவசாயிகள் செல்ல முயன்றதால், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.

இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். காவல்துறையினர் சார்பிலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் குடியரசு தினத்தில் நடைபெற்ற கலவரத்தில் 300 காவலர்கள் படுகாயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT