இந்தியா

வணிகத்தில் ஈடுபடுவதை எளிதாக்க சுங்கத்துறை நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

DIN

புது தில்லி: வணிகத்தில் ஈடுபடுவதை எளிதாக்க சுங்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 
ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி சர்வதேச சுங்க அமைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது: 
வணிகத்தில் ஈடுபடுவதை எளிதாக்குதல், வர்த்தக வசதிகளை ஏற்படுத்தித் தருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மீது  சுங்கத்துறை தற்போது கவனம் செலுத்தி வருகிறது. பொதுமக்களை மையப்படுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளும்போது, அது சுங்கத்துறையின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறைகளை மேலும் விஸ்தரிக்கும். பாதுகாப்பான விநியோக நடைமுறைகள் நமது வளர்ச்சிக்கு மிக முக்கியமாகும். அதை முன்னின்று உறுதி செய்வதற்கு இந்திய சுங்கத்துறை கடுமையாக முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார். 
மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் வெளியிட்ட செய்தியில், "கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து நாம் வெளிவரும்போது, நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் சுங்கத்துறையின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT