முகப்பு
இந்தியா

தில்லி வன்முறை: 20 விவசாயிகளுக்கு நோட்டீஸ்

தில்லியில் குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்கத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா

தில்லி வன்முறை: 20 விவசாயிகளுக்கு நோட்டீஸ்

தில்லியில் குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்கத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

தில்லியில் குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்கத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணியில் நிபந்தனைகளை மீறியதால் நடந்த வன்முறை தொடர்பாக 3 நாள்களில் விரிவான விளக்கமளிக்க தில்லி காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், குடியரசு நாளன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

அதற்கு நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கினர். இதனிடையே நிபந்தனைகளை மீறியதாக 20 விவசாய சங்கத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யோகேந்திர யாதவ், பல்தேவ் சிங் சிர்ஸா, பல்பீர் எஸ் ராஜீவால் உள்ளிட்ட 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் 3 நாள்களில் விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்றும் தில்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →