தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதல்: 6 பேர் பலி
தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலியானார்கள்.
தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலியானார்கள்.
தெலங்கானாவில் ஆட்டோ ஒன்றில் சிலர் திருமண ஷாப்பிங்கிற்காக வாரங்கலுக்கு இன்று சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள மாரிமிட்டா பகுதியில் இவர்கள் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியது.
இதில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.