முகப்பு
இந்தியா

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை வீடுகளுக்குத் திரும்பப்போவதில்லை: விவசாயி

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை வீடுகளுக்குத் திரும்பப்போவதில்லை என்று ராம்பூர் மாவட்ட விவசாயி தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை வீடுகளுக்குத் திரும்பப்போவதில்லை என்று ராம்பூர் மாவட்ட விவசாயி தெரிவித்துள்ளார். 
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசிப்பூர் எல்லையில் ஏராளமான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும், இல்லையேல் அகற்றப்படுவர் என அம்மாநில அரசு வியாழக்கிழமை மாலை எச்சரிக்கை விடுத்தது.  
இதையடுத்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், நாங்ள் எங்கும்  செல்லமாட்டோம் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவித்தார். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளை வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் கூறியதை அடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து போராட்டம் நடைபெறும் காசிப்பூருக்கு அதிகளவில் விவசாயிகள் குவிந்தனர். 
இதனால் அங்கு பதற்றம் கூடியதை அடுத்து அங்கு அதிகளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். காசிப்பூரில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ராம்பூர் மாவட்ட விவசாயி இன்று கூறுகையில், "அரசு வழங்கிய நோட்டீஸ்களை நாங்கள் ஏற்கவில்லை. சட்டங்களை திரும்பப்பெறும் வரை வீடுகளுக்குத் திரும்பப்போவதில்லை. நாங்கள் இங்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார். 
தில்லி-உத்தரப்பிரதேச எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட பிலாஸ்பூர் விவசாயி தெரிவிக்கையில், நோட்டீஸ்களால் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முடியாது; எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே அவை முடிவடையும் என்றார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →