முகப்பு
இந்தியா

விவசாயிகள் போராட்டத்தைக் கலைக்கும் காவல்துறை : சிங்கு எல்லையில் பதற்றம்

தில்லி சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கலைந்து செல்ல வலியுறுத்தி காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

தில்லி சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கலைந்து செல்ல வலியுறுத்தி காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

சிங்கு எல்லையிலுள்ள விவசாயிகளை கலைந்து செல்ல வலியுறுத்துமாறு அப்பகுதி உள்ளூர் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 63-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவசாய சங்கத் தலைவர்களுக்கு தில்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவர்களை எல்லைப் பகுதிகளிலிருந்து கலைந்து செல்லவும் வலியுறுத்தியுள்ளது.

இதனையொட்டி சாலைகளை மூடி, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை காவல்துறையினர் துண்டித்தனர். எனினும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கலைந்து செல்ல வலியுறுத்தி தில்லி காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விவசாயிகளை விரட்டினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
 

முழு கட்டுரையைப் படிக்க →