இந்தியா

அனைத்துப் பிரச்னைகளையும் விவாதிக்கத் தயார்: பிரதமர்

DIN


நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராகவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன. 29) தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் ஒளி மிகுந்த எதிர்காலத்திற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழிவகுக்கும் என்று கூறினார்.

பிரச்னைகள் குறித்த அனைத்து கட்சிகளின் நிலைப்பாடுகளையும் தெரிந்துகொள்ளத் தயார் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT