முகப்பு
இந்தியா

செங்கோட்டைக்குள் நுழைந்தவர்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது ஏன்? ராகுல்காந்தி

குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற்ற பேரணியின்போது செங்கோட்டைக்குள் நுழைந்தவர்களைத் தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்தது ஏன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
செங்கோட்டைக்குள் நுழைந்தவர்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது ஏன்? ராகுல்காந்தி
பகிர்:

குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற்ற பேரணியின்போது செங்கோட்டைக்குள் நுழைந்தவர்களைத் தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்தது ஏன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று தலைநகர் தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. காவல்துறை மற்றும் விவசாயிகளிடையேயான மோதல் சம்பவமாக மாறிய இந்தப் பேரணியின் போது சிலர் செங்கோட்டைக்குள் நுழைந்து மதக்கொடியை ஏற்றினர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாய சங்கங்களின் சார்பில் பேசிய விவசாயிகள் இதற்கும் தங்களது பேரணிக்கும் சம்பந்தம் இல்லை என மறுத்தனர். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி ஆளும் மத்திய அரசை விமர்சித்துள்ளார். 

அவர் தனது உரையில், “அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு தீர்வுக்கு வரவேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று அவற்றை குப்பைத் தொட்டில் வீசி எறிவதே சிறந்த தீர்வாகும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, விவசாயிகள் வீட்டிற்கு செல்வார்கள் என்று அரசு நினைக்கக்கூடாது என தெரிவித்த ராகுல்காந்தி செங்கோட்டையில் மக்கள் ஏன் அனுமதிக்கப்பட்டனர்? அவர்கள் ஏன் தடுத்து நிறுத்தப்படவில்லை? செங்கோட்டைக்குள் சர்ச்சைக்குரிய நபர்களை அனுமதிப்பதன் நோக்கம் என்ன? என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேள்வி எழுப்புவதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →