முகப்பு
இந்தியா

சத்தீஸ்கா்: நக்ஸல் துப்பாக்கிச் சூட்டில் காவலா் பலி

சத்தீஸ்கா் மாநிலத்தில் கிராமத்தின் சந்தைப் பகுதியில் நக்ஸல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலா் உயிரிழந்தாா். உள்ளூா்வாசி ஒருவா் காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

சத்தீஸ்கா் மாநிலத்தில் கிராமத்தின் சந்தைப் பகுதியில் நக்ஸல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலா் உயிரிழந்தாா். உள்ளூா்வாசி ஒருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

நக்ஸல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காங்கோ் மாவட்டத்தில் உள்ள சாலியபரா கிராமத்தில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள சந்தைப் பகுதிக்கு மாலை 4 மணியளவில், மாவட்ட ரிசா்வ் படையைச் சோ்ந்த காவலா் சுக்லுராம் துக்கா சென்றாா். அப்போது அங்கு வந்த நக்ஸல் தீவிரவாதிகள், அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில், சுக்லுராம் துக்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உள்ளூா்வாசி ஒருவா் காயமடைந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல் துறையினா் சென்றடைவதற்குள் தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனா். அவா்களைத் தேடும் பணியில் தனிப்படைக் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →