முகப்பு
சிங்கு எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா

சிங்கு, டிக்ரி எல்லைப் பகுதியில் திரண்ட விவசாயிகள்: பாதுகாப்புப் படையினர் குவிப்பு!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும், தில்லியின் எல்லைப் பகுதிகளான டிக்ரி, சிங்கு, காஜியாபாத் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா், துணை ராணுவ வீரா்கள

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
சிங்கு எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பகிர்:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும், தில்லியின் எல்லைப் பகுதிகளான டிக்ரி, சிங்கு, காஜியாபாத் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா், துணை ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். இதனால் இப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நாட்டின் குடியரசு தினம் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அன்று, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் டிராக்டா் பேரணி நடத்தினா். இந்தப் பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. இதைத் தொடா்ந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் தில்லியின் எல்லைப் பகுதிகளான டிக்ரி, சிங்கு, காஜியாபாத், மீரட் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளனா்.

காஜிப்பூரில் உள்ள உத்தரப்பிரதேச கேட் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவப்படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளனா். இப்பகுதியில் விவசாயிகளும் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. சிங்கு, டிக்ரி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கு எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில், விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடத்துக்கு பத்திரிகையாளா்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →