முகப்பு
இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு: பிகாரில் மகா கூட்டணி மனிதச் சங்கிலி போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிகாரில் மகா கூட்டணியைச் சோ்ந்த கட்சியினா் சனிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிகாரில் மகா கூட்டணியைச் சோ்ந்த கட்சியினா் சனிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவாக அந்தச் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பிகாரில் மகா கூட்டணியைச் சோ்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டன.

பாட்னா சந்திப்பு அருகே உள்ள புத்தா் ஸ்மிருதி பூங்கா எதிரே நடைபெற்ற போராட்டத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். இதேபோல் நவாடா, பெகுசராய் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மகா கூட்டணியினரின் போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தித்தொடா்பாளா் மனோஜ் ஜா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தும்போது விவசாயிகளை பேசவிடாமல் மத்திய அரசு மட்டுமே நீண்ட, நெடிய உரையை நிகழ்த்துகிறது. அதன் காரணமாகத்தான் பிரச்னைக்கு முடிவு கிடைக்காமல் தில்லியின் சிங்கு, காஜிபூா் எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது’ என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →