முகப்பு
மோடிக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா பானர்ஜி
இந்தியா

மோடிக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான அரசியல் மோதல் என்பது நாடறிந்த விஷயம். 

இந்தியா

மோடிக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான அரசியல் மோதல் என்பது நாடறிந்த விஷயம். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
மோடிக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா பானர்ஜி
பகிர்:

புது தில்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான அரசியல் மோதல் என்பது நாடறிந்த விஷயம். 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து, இரு தரப்புக்கும் இடையே சாவல்களும் விடப்பட்டன. இறுதியாக மம்தா பானர்ஜி தேர்தலில் வென்று, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு மாறவில்லை.

ஆனால், மேற்கு வங்கத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த மாம்பழ வாசனையை தில்லியிலும் வீச வைக்க விரும்பினார் மம்தா பானர்ஜி.

அதற்காக அவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? மேற்கு வங்க மாநிலத்தில் விளையும் மிகச் சிறந்த மாம்பழ வகைகளை கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார். அதோடு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் வாழ்த்துகளுடன் மாம்பழங்களையும் அனுப்பியிருந்தார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், தில்லி முதல்வர் அரவிந்ந்த கேஜரிவாலுக்கும் கூட இந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவி வந்த கசப்பான உறவு, இந்த மாம்பழங்களால், இனிப்பானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →