முகப்பு
இந்தியா

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி: 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி மறுப்பு

இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசிக்கான 3ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது.

Updated On : 1 ஜூலை, 2021 at 11:27 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசிக்கான 3ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது.

ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மேற்கொள்ள இருந்தது.

இந்நிலையில், அதற்கான அனுமதியை மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு மறுத்துள்ளது.

Advertisement

இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சில நாள்களுக்கும் முன்பு தான் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.