இந்தியா

கரோனா: 4 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு

DIN

இந்தியாவில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1005 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 3,99,459 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 48,786 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,04,11,634-ஆக உயா்ந்துள்ளது. எனினும், தொடா்ந்து நான்காவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 33.57 கோடியைக் கடந்தது.

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,23,257 ஆகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.72 சதவீதமாகும்.

தொடா்ந்து 49-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 61,588 போ் குணமடைந்தனா்.

இதுவரை மொத்தம் 2,94,88,918 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். மொத்த பாதிப்பில் குணமடைந்தோா் விகிதம் 96.97 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,20,21,494 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிதாக ஏற்பட்ட 1,005 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக உத்தரகண்ட் மாநிலத்தில் 221 பேரும், கேரளத்தில் 142 பேரும், மகாராஷ்டிரத்தில் 141 பேரும் உயிரிழந்தனா். கரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு மகாராஷ்டிரத்தில் அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 1,21,945 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். இதற்கு அடுத்து கா்நாடகத்தில் 35,040 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT