இந்தியா

‘தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 300 பெண்கள் துன்புறுத்தப்பட்டனர்’: சுவேந்து அதிகாரி

ANI

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 300க்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையின் போது தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து முக்கியமான தகவல்கள் இடம்பெறாததால் எதிர்க்கட்சியான பாஜக வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பேசியதாவது,

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறை காட்டுமிராண்டித்தனமானது. இதில் பாஜக ஊழியர்கள் கொலை செய்யப்பட்டனர். 300க்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டனர், அதில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகினர். இதுகுறித்த எந்த தகவல்களும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. எனவே சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறை குறித்த விசாரணையை தன்னாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்பை வரவேற்கிறோம். மேலும், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வேறு மாநிலத்தில் பதிய வேண்டும். அப்போது தான் விசாரணை நேர்மையாக நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். 

இன்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டமானது, ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 7ஆம் தேதி 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT