நாடு முழுவதும் 34 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: மத்திய அரசு
நாடு முழுவதும் 34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 42,64,123 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 34,00,76,232 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 27,94,54,091 பேர் முதல் தவணையும் 6,06,22,141 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும், 18 முதல் 44 வயதுடையோருக்கு 9,63,77,462 தடுப்பூசிகள், 45 முதல் 59 வயதுக்கு மேற்பட்டோருக்கு 10,61,02,610 தடுப்பூசிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 9,30,26,463 தடுப்பூசிகள், முன்களம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 5,44,69,796 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நாட்டில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பல கட்டங்களாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம் என்ற திருத்தப்பட்ட புதிய தடுப்பூசி கொள்கை ஜூன் 21ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.