கேரளத்தில் கரோனா மூன்றாம் அலையை தவிர்க்க குறைந்தது 85 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக குறைக்கப்பட்டு மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கேரள மாநிலத்தில் இரண்டாம் அலையின் தாக்கம் குறையவில்லை.
இந்நிலையில், கேரளத்தில் கரோனா நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கேரளத்தில் அதிகளவிலான கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது, அதனால் தான் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கரோனாவால் உயிரிழப்போரின் தகவல்களை மருத்துவமனைகள் 24 மணிநேரத்தில் தெரிவிப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகின்றோம். கேரளத்தின் இறப்பு விகிதம் 0.4 சதவீதமாக உள்ளது.
மூன்றாம் அலையை சமாளிக்க குறைந்தது 85 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முயற்சி செய்து வருகின்றோம். தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. நாளொன்றுக்கு 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டமைப்பு உள்ளது. மத்திய அமைச்சகத்திடம் அதிக தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.