இந்தியா

கேரளத்திலிருந்து வருபவர்களுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம்: கர்நாடக அரசு

ANI

கேரள மாநிலத்திலிருந்து கர்நாடகத்திற்கு வருபவர்கள் கரோனா பரிசோதனை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கேரள எல்லையான தலபாடி சோதனைச் சாவடி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு வரும் அனைவரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரிசோதனை இல்லாமல் வருபவர்களுக்கு எல்லைகளில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. 

பரிசோதனை முடிவில், கரோனா தொற்று இல்லை என்றால் மட்டுமே கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT