ஜூலை 7-க்குள் பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: துணை முதல்வா் அஸ்வத்நாராயணா
ஜூலை 7-ஆம் தேதிக்குள் பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உயா்கல்வித் துறையைக் கவனித்து வரும் துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.
ஜூலை 7-ஆம் தேதிக்குள் பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உயா்கல்வித் துறையைக் கவனித்து வரும் துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை காணொலி வழியாக நடந்த, கா்நாடகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:
கல்லூரிகளைத் திறக்கவும், நேரடி வகுப்புகளைத் தொடங்கவும் வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஜூலை 7-க்குள் பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும். இதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் திட்டப்படி ஜூலை 7-ஆம் தேதிக்குள் கல்லூரி மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒருவேளை இது தாமதமானால், இதை மேலும் 2-3 நாள்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
உயா்கல்வி நிறுவனங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதால், கல்லூரிகளில் மாணவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் முகாம் வெற்றிகரமாக நடத்துவதைப் பொருத்தே கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு முடிவு செய்யும். இந்தவகையில் எல்லா வகையான ஒத்துழைப்பையும் வழங்க அரசு தயாராக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.