முகப்பு
இந்தியா

சச்சினின் மகன் தோனியா? சத்தீஸ்கர் பள்ளிக் கல்வித் துறையால் குழப்பம்

சத்தீஸ்கரில் ஒப்பந்தமுறை ஆசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு  சச்சின் டெண்டுல்கர் மகன் மகேந்திர சிங் தோனி எனும் விண்னப்பதாரரை பள்ளிக் கல்வித் துறை தேர்வு செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:


சத்தீஸ்கரில் ஒப்பந்தமுறை ஆசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு  சச்சின் டெண்டுல்கர் மகன் மகேந்திர சிங் தோனி எனும் விண்னப்பதாரரை பள்ளிக் கல்வித் துறை தேர்வு செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்துக்கு அரசு நடத்தும் ஆங்கில வழி கல்வியளிக்கும் பள்ளிக்கான ஒப்பந்தமுறை ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை தேர்வு செய்து வருகிறது. இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு விண்ணப்பதாரரின் பெயர் இடம்பெற்றிருந்தது. 

விண்ணப்பதாரரின் பெயர் மகேந்திர சிங் தோனி. அவரது தந்தை பெயர் சச்சின் டெண்டுல்கர். அவர் பட்டப் படிப்பில் 98 சதவிகிதம் மதிப்பெண் பெற்றதால் விண்ணப்பதாரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். மேலும் ஆச்சரியமளிக்கும் வகையில் நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் பட்டியலில் தோனியின் பெயரையும் பள்ளிக் கல்வித் துறை தேர்வு செய்திருந்தது.

எனினும், ஜூலை 2-ம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தோனி பங்கேற்கவில்லை. இதனால், விண்ணப்பம் போலியானது என சந்தேகமடைந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் காவல் துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்தனர்.

ராய்கர் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.பி. ஆதித்யா இதுபற்றி கூறியது:

"மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார். அவர் நேர்முகத் தேர்வில் பங்கேற்கவில்லை. அவர் உண்மையான நபரா என்பதில் எங்களுக்குப் பிரச்னை இருந்தது. எனவே, இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையிடம் தகவல் தெரிவித்து, காவல் துறை விசாரணைக்காக புகார் அளித்துள்ளோம்."

முழு கட்டுரையைப் படிக்க →