முகப்பு
இந்தியா

ரஃபேல் ஒப்பந்தம்: விசாரணையை தொடங்கியது பிரான்ஸ்

இந்தியாவுக்கு ரூ.59,000 கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

இந்தியாவுக்கு ரூ.59,000 கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடி மதிப்பிலான 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-இல் கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. தனது தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் போர் விமானங்களை தலா ரூ.526 கோடிக்கு வாங்கத் தீர்மானித்ததாகவும், அதே விமானங்களை தலா ரூ.1,670 கோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வாங்குவதாகவும் 
காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
மேலும், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ், இதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறியது. அந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்தது. 
டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தது.

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் இந்திய இடைத்தரகர் ஒருவருக்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8.8 கோடியை லஞ்சமாக வழங்கியதாக பிரான்ûஸ சேர்ந்த புலனாய்வு வலைதளமான "மீடியாபார்ட்' கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டது. அந்த வலைதளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தி விவரம்:

ரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பாக இந்தியா-பிரான்ஸ் ஆகிய இரு நாட்டு அரசுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணை கடந்த ஜூன் 14-ஆம் தேதி முறைப்படி தொடங்கியுள்ளது. இந்த விசாரணையை தேசிய நிதி விசாரணை அதிகாரி அலுவலகம் (பிஎன்எஃப்) தொடங்கியுள்ளது. 

மீடியாபார்ட் வலைதளத்தில் வெளியான செய்திகள் மற்றும் பிரான்ûஸ சேர்ந்த, பொருளாதார குற்றங்களை விசாரித்து வரும் ஷேர்பா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அளித்த புகார் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரை பிஎன்எஃப் அமைப்பின் அப்போதைய தலைவரான எலியான் ஹூலெட் மறைத்துவிட்டார். 
எனினும் தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முறைப்படி தொடங்கியுள்ளது என்று மீடியாபார்ட் வலைதளம் 
தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.