நாட்டில் புதிதாக 43 ஆயிரம் பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,071 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,071 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52,299 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் எண்ணிக்கையைக் காட்டிலும் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 52-வது நாளாக அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4,85,350 ஆகக் குறைந்துள்ளது. மொத்த கரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருவோர் 1.59 சதவிகிதம். நாட்டில் இதுவரை மொத்தம் 2,96,58,078 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 97.09 சதவிகிதமாக உள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 35.12 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் வாராந்திர விகிதம் தொடர்ந்து 5 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 2.44 சதவிகிதமாக இருக்கிறது.
நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 2.34 சதவிகிதமாக உள்ளது. தொடர்ந்து 27 நாள்களாக இது 5 சதவிகிதத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.
நாட்டில் இதுவரை மொத்தம் 4.82 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.