முகப்பு
இந்தியா

உள்நாட்டு விமானங்களில் 65% பயணிகளுக்கு அனுமதி

உள்நாட்டு விமானங்களில் 65 சதவிகிதம் வரை பயணிகளை ஏற்றிச் செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 5 ஜூலை, 2021 at 8:55 PM
உள்நாட்டு விமானங்களில் 65% பயணிகளுக்கு அனுமதி
பகிர்:

உள்நாட்டு விமானங்களில் 65 சதவிகிதம் வரை பயணிகளை ஏற்றிச் செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கெனவே 50 சதவிகிதம் பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 65 சதவிகித பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தப்படுவதால், கரோனா இரண்டாவது அலை குறைந்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. 

Advertisement

அந்தவகையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைக்கு 50 சதவிகித பயணிகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது 65 சதவிகித பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து உள்ளூர் விமான சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பராமரிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் திணறி வருகின்றன.

கரோனா தொற்றின் இரண்டாவது அலையால் ஏற்பட்ட பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு விமான சேவையில் குறைந்தபட்ச கட்டணத்தில் 15 சதவீதம் உயர்த்தவும் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.