பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்(படம்: டிவிட்டர்) 
இந்தியா

மகாராஷ்டிர பேரவைக் கூட்டம்: பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

மகாராஷ்டிர சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில், பாஜக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ANI

மகாராஷ்டிர சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில், பாஜக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மீதான் ஊழல் புகார், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, மராத்தா ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மாநில அரசுக்கு எதிராக சட்டப்பேரவையின் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இரண்டு நாள்கள் கூடியுள்ள மழைக்கால கூட்டத்தொடரில், புதிய சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு மற்றும் தில்லி விவசாயிகள் போராட்டம், மராத்தா இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.  

முன்னதாக, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக இருந்த நானோ படேலை காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து, பேரவைத் தலைவர் பதவியை ராஜநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

SCROLL FOR NEXT