கோப்புப்படம் 
இந்தியா

சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் நாளை(ஜூலை 6) சந்திப்பு

பஞ்சாபில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

DIN

பஞ்சாபில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோருக்கு இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

மாநிலத்தில் கட்சித் தலைவரான நவ்ஜோத் சிங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத காரணத்தால், ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாக தகவல் பரவியதையடுத்து கடந்த வாரம் சித்துவுடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சமரசத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தில்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைவர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை கட்சி மேலிடம் வேகப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் முதல் டீசல் வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஏராளமான படங்கள்!

மகன் பிடித்த படங்கள்... மியா!

போர்நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்! காஸாவில் மீண்டும் தாக்குதல்; 33 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

2014-ல் பிரதமர் பதவிக்கு மோடியை நிராகரித்தவரா நிதீஷ் குமார்?

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம் | SC | RN Ravi

SCROLL FOR NEXT