மத்திய அமைச்சரவை நாளை மாலை மாற்றம்?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை (புதன்கிழமை) மாலை மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை (புதன்கிழமை) மாலை மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அமைச்சரவை மாற்றப்படுவது குறித்த பேச்சுகள் கடந்த சில நாள்களாகவே ஊடகங்களில் இடம்பெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாக ஜூலை 8-ம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவது உறுதியானது.
இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) மாலையே அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனாவால் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு காணொலி வாயிலாகக் கூடுவது குறிப்பிடத்தக்கது.