மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 
இந்தியா

மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்குவார் உள்ளிட்டோர் ராஜிநாமா

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். 

DIN

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். 

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், குழந்தைகள்- பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சௌத்ரி ஆகிய மூவரும் ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ராஜிநாமா செய்யும் அமைச்சர்களுக்கு கட்சியில் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. 

முன்னதாக, மத்திய சமூகநலத் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அவரும் தனது பதவியை ராஜிநாமா செய்கிறார். 

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது.  ஆட்சி அமைத்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அமைச்சரவை மாற்றப்படவுள்ளது. 

பிகாரைச் சேர்ந்த ராம் விலாஸ் பாஸ்வான், சுரேஷ் அங்காடி போன்றோர் காலமானது, மத்திய சமூகநலத் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது உள்ளிட்டவற்றால் அமைச்சரவையில் பதவிகள் காலியாக உள்ளன. 

இதனால் தற்போது மத்திய அமைச்சரவையில் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த பொறுப்புகளை வகித்துவருகின்றனர். 

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தில்லியிலுள்ள பிரதமர் இல்லத்திற்கு பாஜக தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனாவால் உள்ளிட்ட மூத்தத் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா தில்லியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT