மத்திய அமைச்சரானார்கள் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா 
இந்தியா

மத்திய அமைச்சரானார்கள் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா

 எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்பட 43 புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

DIN

மத்திய அமைச்சகம் விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்பட 43 புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.  

தமிழக பாஜக தலைவராக உள்ள எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதையடுத்து, மோடி அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு அடுத்தபடியாக தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

மத்திய பிரதேசத்தை ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் தீ: பயணிகள் கீழே இறங்கியதால் பரபரப்பு

யார் புரிய வைப்பது?

‘முதியோா் தரிசனம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்’

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: இரு வடமாநில இளைஞா்கள் கைது

பருவ மழை: பள்ளிகள், மாணவா்கள் பாதுகாப்பு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

SCROLL FOR NEXT