முகப்பு
இந்தியா

'நாட்டின் சட்டங்களைப் பின்பற்றுங்கள்’: சுட்டுரை நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

இந்தியாவில் பணியாற்றுபவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களை பின்பற்றி நடக்க வேண்டும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் பணியாற்றுபவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களை பின்பற்றி நடக்க வேண்டும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக அஷ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சுட்டுரை நிறுவனத்துக்கு சட்டப்பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அஷ்வினி வைஷ்ணவ் நாட்டில் பணியாற்றுபவர்கள் அரசின் சட்ட திட்டங்களை பின்பற்றி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கடந்த மாதம் சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை ஏற்காததால், நாட்டின் சட்டப் பாதுகாப்பை சுட்டுரை நிறுவனம் இழந்ததாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →