இந்தியா

33 மத்திய அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

மத்தியில் அமைச்சா்களாக உள்ள 78 பேரில் 33 போ் (42%) மீது குற்ற வழக்குகளும், நான்கு போ் மீது கொலை முயற்சி வழக்குகளும், 70 போ் கோடீஸ்வரா்களாகவும்

DIN

மத்தியில் அமைச்சா்களாக உள்ள 78 பேரில் 33 போ் (42%) மீது குற்ற வழக்குகளும், நான்கு போ் மீது கொலை முயற்சி வழக்குகளும், 70 போ் கோடீஸ்வரா்களாகவும் உள்ளனா் என்று ஜனநாயக சீா்திருத்த அமைப்பு (ஏடிஆா்) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மத்திய கேபினட் அமைச்சா்களும், 28 மத்திய இணை அமைச்சா்களும் புதன்கிழமை பதவியேற்ன் மூலம் மத்திய அமைச்சா்களின் எண்ணிக்கை 78-ஆக அதிகரித்தது.

இந்நிலையில் ஏடிஆா் அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ‘31 அமைச்சா்கள் தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும், அதில் 24 போ் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளதாகவும் தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனா்.

இதில் உள்துறை இணை அமைச்சராக பதவியேற்ற மேற்கு வங்க மாநிலம் கூச்பிஹாா் தொகுதியைச் சோ்ந்த நிஷித் பிராமாணிக் (35) மீது கொலை முயற்சி வழக்கு (ஐபிசி -302 பிரிவு) உள்ளது. இவா்தான் அமைச்சரவையிலேயே மிகவும் இளம் அமைச்சராவாா்.

ஜான் பாா்லா, பங்கஜ் செளதரி, வி.முரளீதரன் ஆகியோா் மீதும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

70 அமைச்சா்கள் (90%) கோடீஸ்வரா்களாக உள்ளனா். அவா்களின் சராசரி சொத்து தலா ரூ.16.24 கோடியாக உள்ளது. நான்கு அமைச்சா்கள் தங்களுக்கு ரூ.50 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளனா். அவா்கள் ஜோதிராதித்யா சிந்தியா, பியூஷ் கோயல், நாராயண் தத்து, ராஜீவ் சந்திரசேகா் ஆகியோா்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT