கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு: 6 போ் கைது
கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் போலீஸாா் 6 பேரை கைது செய்தனா்.
கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் போலீஸாா் 6 பேரை கைது செய்தனா்.
பெங்களூரு,. டி.ஜே.ஹள்ளி காவல் சரகத்திற்குள்பட்ட ஷியாம்புரா சாலையில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி இரவு கட்டடத் தொழிலாளி கிருஷ்ணமூா்த்தி என்பவா் மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அந்தோணி, தீனா, அஜய், சிவகுமாா், ஸ்டீபன், அருண்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.
விசாரணையில் கிருஷ்ணமூா்த்தி தனது 2-ஆவது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால், கூலிப்படை அமைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து டி.ஜே.ஹள்ளி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.