முகப்பு
இந்தியா

ஆக்சிஜன் இருப்பு, உற்பத்தி: உயர்நிலைக்குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து உயர்நிலைக்குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 9 ஜூலை, 2021 at 12:03 PM
நரேந்திர மோடி
பகிர்:

நாட்டில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து உயர்நிலைக்குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியது. ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் நாட்டில் தற்போது ஆக்சிஜன் இருப்பு மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து உயர்நிலைக்குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

கரோனா மூன்றாவது அலை பாதிப்பு குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.