கோப்புப்படம் 
இந்தியா

மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகள்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சாதனை முயற்சிக்காக எந்த விளையாட்டிலும் ஈடுபட வேண்டாம் என்றும் மாநிலங்களுக்கு போதிய அளவில் கரோனா தடுப்பூசி விநியோகம்

DIN

சாதனை முயற்சிக்காக எந்த விளையாட்டிலும் ஈடுபட வேண்டாம் என்றும் மாநிலங்களுக்கு போதிய அளவில் கரோனா தடுப்பூசி விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் புதிய சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள மன்சுக் மாண்டவியாவை முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, தமிழ்நாட்டில் பல மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் போதிய அளவில் தடையின்றி தடுப்பூசி விநியோகம் செய்வதை உறுதிப்படுத்துவதே புதிய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியாவின் முதல் பணியாக இருக்க வேண்டும். தயவு செய்து கின்னஸ் சாதனை முயற்சிக்காக எந்த விளையாட்டிலும் ஈடுபட வேண்டாம். அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி விநியோகம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி தொடா்ந்து விமா்சித்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் பதவியில் இருந்து ஹா்ஷ் வா்தனை விடுவித்ததன் மூலமாக தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்ததை ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அக்கட்சி கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில், புதிய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, கரோனா தடுப்பூசியை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT