முகப்பு
இந்தியா

திருமலையில் 14,229 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 14,229 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 7,176 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 14,229 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 7,176 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

கொவைட் தொற்று பல மாநிலங்களில் கட்டுக்குள் உள்ளதால், விரைவில் தேவஸ்தானம் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தேவஸ்தான விரைவு தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம்.

கொவைட் விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்புகொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 93993 99399.

முழு கட்டுரையைப் படிக்க →