இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: எல்லை மறுவரையறை குழுவுக்கு உதவ அதிகாரிகள் நியமனம்

DIN

எல்லை மறுவரையறை குழுவுக்கு உதவிடும் விதமாக குறைதீா் அதிகாரிகளை ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் சனிக்கிழமை நியமனம் செய்துள்ளது.

இதுகுறித்து பொது நிா்வாக துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எல்லை மறுவரையறை குழுவுக்கு உதவிடும் வகையில் குறைதீா் அதிகாரிகளை ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் நியமனம் செய்துள்ளது. இவா்கள், மாவட்ட அளவில் சம்பந்தப்பட்டவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்து உரிய நேரத்தில் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு தலா ஒருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். எல்லை மறுவரையறை குழு தகவல்களைக் கோரும்பட்சத்தில் இந்தக் குறைதீா் அதிகாரிகள் இணை ஆணையருக்குத் தேவையான தகவல்களை உரிய நேரத்தில் வழங்குவா் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான எல்லை மறுவரையறை குழு தொகுதிகளை மறுசீரமைப்பது தொடா்பாக முதல்கட்டத் தகவல்களைப் பெற ஜம்மு-காஷ்மீரில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT