முகப்பு
இந்தியா

மேக்கேதாட்டு அணையை நிச்சயம் கட்டுவோம்: கர்நாடக அரசு

பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பசவராஜ் பொம்மை
பகிர்:

மேக்கேதாட்டு அணை நிச்சயம் கட்டப்படும் என்றும் அதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அம்மாநில உள் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மேக்கேதாட்டு அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

கர்நாடகாவின் கோரிக்கைகளை மத்திய அரசு சட்டப்படி பரிசீலனை செய்யும். அதன்படி கர்நாடகத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் .

காரிவி மேலாண்மை ஆணையம் அனைத்து விவகாரங்களையும் கண்காணித்து வருகிறது. அதனால், மேக்கேதாட்டு அணை கட்டுமானத்தை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை.

உச்சநீதிமன்றம் கட்டுமானத்திற்கு எந்தவித தடையும்  விதிக்கவில்லை.  குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

முழு கட்டுரையைப் படிக்க →