முகப்பு
இந்தியா

தாராவியில் அடுத்த 2-3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி: சிவசேனை எம்.பி. தகவல்

மும்பை தாராவியில் அடுத்த 2-3 மாதங்களில் மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிவசேனை எம்.பி. ராகுல் ஷெவாலே தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

மும்பை தாராவியில் அடுத்த 2-3 மாதங்களில் மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிவசேனை எம்.பி. ராகுல் ஷெவாலே தெரிவித்தார்.

கரோனா தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள தடுப்பூசி என்பதே ஒற்றை ஆயுதமாக இருக்கிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 38 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் மும்பை தாராவியில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சிவசேனை எம்.பி. ராகுல் ஷெவாலே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவர், 'அடுத்த 2-3 மாதங்களில் தாராவியில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் 10,000 தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளோம். இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் தனித்தனியாக 30,000 தடுப்பூசிகளை முன்பதிவு செய்வோம். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த தனியார் மருத்துவமனைகளில் நாங்கள் ஆர்டர் செய்துள்ளோம். இந்த தாராவி இயக்கத்திற்கு பல தன்னார்வலர்களும் உதவ முன்வருகின்றனர்' என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →