முகப்பு
இந்தியா

உ.பி.யைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் புதிய மக்கள் தொகை மசோதா

உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் புதிய மக்கள் தொகை மசோதா அமல்படுத்தப்படும் என பாஜக தேசிய செயலர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். 

Updated On : 13 ஜூலை, 2021 at 2:56 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:07 AM

உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் புதிய மக்கள் தொகை மசோதா அமல்படுத்தப்படும் என பாஜக தேசிய செயலர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிய மக்கள் தொகைக் கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஜூலை 19 வரை அம்மாநில மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா உத்தரப் பிரதேச மாநில சட்ட இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பாஜக தேசிய செயலர் சி.டி.ரவி, கர்நாடகாவிலும் புதிய மக்கள் தொகை கொள்கை அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ''மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உத்தரப் பிரதேசம், அசாமைத் தொடர்ந்து கர்நாடாகவும் , புதிய மக்கள் தொகைக் கொள்கையை அமல்படுத்தப்படவுள்ளது. 

Advertisement

குறைவான இயற்கை வளங்களே உள்ள நிலையில், அவற்றைக்கொண்டு வருங்காலங்களில் மக்கள் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்வது கடினம்'' என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று (திங்கட்கிழமை) முழுமையான விவாதங்களுக்கு பிறகு புதிய மக்கள் தொகை மசோதா செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.  

பாஜக ஆளும் மாநிலமான அசாமிலும் இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும், இரண்டு குழந்தைகள் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படவிருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.