மாநிலங்களுக்கு இதுவரை 39.46 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கல்: மத்திய அரசு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து இதுவரை 39.46 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து இதுவரை 39.46 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள தகவலில்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 39.46 கோடிக்கு மேல் (39,46,94,020) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 12,00,000 டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளன.
மொத்தத் தயாரிப்பில் விரயமானது சேர்த்து மாநிலங்களில் 37,55,38,390 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவச தடுப்பூசியை வழங்கி வருகிறது. ஜூன் 21 முதல் தொடங்கப்பட்ட புதிய தடுப்பூசி இயக்கத் திட்டத்தின்படி செலுத்தப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் புதிய திட்டத்தின்படி மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து 75% தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.