முகப்பு
இந்தியா

தில்லியில் கனமழை: 16 நாள்கள் தாமதமாகத் தொடங்கியது பருவமழை

தில்லியில் வழக்கமாக பருவமழை தொடங்கும் நாளை விட 16 நாள்கள் தாமதமாக இன்று தொடங்கியது. தில்லியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

Updated On : 13 ஜூலை, 2021 at 9:42 AM
தில்லியில் கனமழை: 16 நாள்கள் தாமதமாகத் தொடங்கியது பருவமழை
பகிர்:


புது தில்லி: தில்லியில் வழக்கமாக பருவமழை தொடங்கும் நாளை விட 16 நாள்கள் தாமதமாக இன்று தொடங்கியது. தில்லியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

வழக்கமாக தில்லியில் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி வந்த நிலையில், சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின் 16 நாள்கள் தாமதமாக இன்று தொடங்கியது. கடைசியாக 2002 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி தாமதமாகத் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை காலை தெற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, தில்லியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Advertisement

வழக்கமாக தில்லியில் ஜூன் 27ஆம் தேதி பருவமழை தொடங்கும். நாடு முழுவதும் பருவமழை ஜூலை 8ஆம் தேதி பரவலாகப் பெய்யும். கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தில்லியில் பருவமழை தொடங்கியது, நாடு முழுவதும் ஜூன் 29ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.

முன்னதாக, தில்லியில் ஜூன் 15ஆம் தேதி பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாக இன்று தொடங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.