முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 13,773 பேருக்கு கரோனா

கேரளத்தில் மேலும் 13,773 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் மேலும் 13,773 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் பதிவிட்டுள்ளது:

"கேரளத்தில் புதிதாக 13,773 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,25,742 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 10.95 சதவிகிதம். இதுவரை மொத்தம் 2,49,30,543 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த நாள்களில் 87 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 15,025 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 56 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 13,043 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டனர். 617 பேருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12,370 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,19,022 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 29,82,545 பேர் குணமடைந்துள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.