FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக...

தனம் தொடர் - படம்: யூடியூப்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

நடிகை சத்யா தேவராஜன் மற்றும் நடிகர் சத்யா எஸ்.கே. ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வரும் தொடர் ‘தனம்’. இந்தத் தொடர் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சக்திவேல் தொடர் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இன்று முதல் பிற்பகல் 1.30 மணிக்கு தனம் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சத்யா தேவராஜன். இவர் தனம் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

தனம் தொடரில், ஸ்ரீகுமார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார், அவர் இறந்த பிறகு அந்த ஆட்டோவின் மூலம் சத்யா தனது குடும்பத்தை எவ்வாறு கவனித்துக் கொள்கிறாள் என்பதே மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

நாயகனாக கிரிஷ் நடித்து வருகிறார். ‘தனம்’ தொடர் கடந்தாண்டு பிப். 17 ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

தனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது, டிஆர்பியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

summary

The broadcast time for the series Dhanam, currently airing on Vijay TV, has been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments