மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,010 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,010 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,010 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,010 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61,89,257ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று 170 பேர் பலியானார்கள்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,26,560ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 7,391 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 59,52,192ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,07,205 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
5,81,266 வீடுகளிலும், 4,471 நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்னர். கடந்த 24 மணிநேரத்தில் 2,14,935 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4,48,24,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.