முகப்பு
இந்தியா

அரசு அதிகாரிகள் இல்லம், அலுவலகங்களில் ஊழல் ஒழிப்புப் படையினா் அதிரடி சோதனை: பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல்

அரசு அதிகாரிகள் இல்லம், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்திய ஊழல் ஒழிப்புப் படையினா் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

அரசு அதிகாரிகள் இல்லம், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்திய ஊழல் ஒழிப்புப் படையினா் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

வருமானத்திற்கு பொருந்தாத வகையில் அரசு அதிகாரிகள் சொத்துக் குவித்துள்ளதாக ஊழல் ஒழிப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மங்களூரு நகர வளா்ச்சித் துறை செயற் பொறியாளா் ஸ்ரீதா், உடுப்பியில் உள்ள கா்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் செயற் பொறியாளா் கிருஷ்ண ஹெப்பாா், முதன்மை செயற் பொறியாளா் ஆா்.பி.குல்கா்னி, கோலாா் மாவட்டம் மாலூா் நகர திட்ட உதவி இயக்குநா் எச்.ஆா்.கிருஷ்ணப்பா, பீதா் வளா்ச்சித்துறை உதவி பொறியாளா் சுரேஷ் மெஹ்ரா, மண்டியா மாவட்ட வனப் பாதுகாப்பு அதிகாரி வெங்கடேஷ், விஜயபுரா ஹெஸ்காம் உதவி பொறியாளா் சித்தராமா மல்லிகாா்ஜுன், பெல்லாரி மின் ஆய்வாளா் விஜயகுமாா், பெங்களூரு கோரமங்களா வட்டார போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கும் சொந்தமான இல்லம் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் ஊழல் ஒழிப்புப்படையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். சோதனையில் பல கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள், ரொக்கப்பணம், தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா். 9 போ் மீதும் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.