முகப்பு
இந்தியா

சினிமா தயாரிப்பாளர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

இந்தி திரைப்பட தயாரிப்பாளரும் டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பூஷண் குமார் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

இந்தி திரைப்பட தயாரிப்பாளரும் டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பூஷண் குமார் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

டி - சீரிஸ் என்ற பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பூஷண் குமார் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வேலை வாங்கி தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளதாக மும்பை காவல்துறை புகார் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அந்தேரியில் டிஎன் நகர் காவல் நிலையத்தில் 30 வயதுமிக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

பூஷண் குமார் தன்னை ஏமாற்றிவிட்டதாக அப்பெண் கூறியுள்ளார். எனவே, காவல் நிலையத்தில் புதார் அளித்துள்ளார்" என்றார்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →