டேனிஷ் சித்திகி கடைசியாக பதிவிட்ட விடியோ 
இந்தியா

டேனிஷ் சித்திகி கடைசியாக பதிவிட்ட விடியோ

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பலியான இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி கடைசியாக பதிவிட்ட விடியோ வைரலாகி வருகிறது.

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பலியான இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி கடைசியாக பதிவிட்ட விடியோ வைரலாகி வருகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திகி, ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்களை புகைப்படம் எடுக்கச் சென்ற இந்திய புகைப்படக் கலைஞர்களின் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

ஆப்கனின் கந்தகர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சென்று தலிபான்கள் தாக்குதலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தலிபான்களின் தாக்குதலில் நேற்று இரவு பலியானார்.

இந்நிலையில் அவர் கடைசியாக டிவிட்டரில் பதிவிட்டிருந்த காணொலி தற்போது வைராலாகி வருகின்றது.

சித்திகி கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூலை 13) டிவிட்டரில் ஒரு காணொலியை பதிவிட்டு,

சிறப்பு பாதுகாப்புப் படையினருடன் சென்று கொண்டிருந்த போது, தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளானோம். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். மேலும், ராக்கெட் குண்டு மூலம் தாக்கப்பட்டதை படம் பிடித்துள்ளேன் என விடியோவையும் பதிவிட்டிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணுக்கு தொந்தரவு: உணவக ஊழியா் மீது தாக்குதல்

கனமழை எச்சரிக்கை! காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வரம்... பிரிகிதா சாகா!

வான்நிலா... தர்ஷா குப்தா!

செங்கோட்டை காா் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 9 எம்எம் தோட்டாக்கள்

SCROLL FOR NEXT