துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட 34 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
துபையிலிருந்து மங்களூரு விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபையிலிருந்து மங்களூரு விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தலில் ஈடுபட்டவர்கள் கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த முகமது அன்சார் (34) மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த முகமது மூஸா (18) இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தங்கத்தை ஆடைகள் வைத்திருந்த பையின் அடிபாகத்தில் உருக்கி ஒட்டவைத்திருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து துபையிலிருந்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துவருவதால் அதிகாரிகள் பரிசோதனைகளை
தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 34.46 லட்சம் ஆகும்.