இந்தியா

மாநிலங்களிடம் 2.51 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய சுகாதாரத்துறை

DIN

மாநிலங்களின் கையிருப்பில் 2.51 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 39,59,21,220 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 41,10,38,530 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் கையிருப்பில் 2,51,62,572 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், 30,250 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 52,90,640 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT