இந்தியா

ஐந்து நட்சத்திர ஹோட்டலுடனான காந்தி நகா் ரயில் நிலையம்: பிரதமா் மோடி திறந்து வைத்தாா்

DIN

குஜராத் மாநிலத்தில், ஐந்து நட்சத்திர ஹோட்டலுடன் கட்டப்பட்டுள்ள மறுசீரமைக்கப்பட்ட காந்திநகா் ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நாட்டிலேயே ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட முதல் ரயில் நிலையம் இதுவாகும். இணையவழி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மறுசீரமைக்கப்பட்ட வாட்நகா் ரயில் நிலையத்தையும், ஆமதாபாத் அறிவியல் நகரத்தில் புதிய கட்டடங்களையும், காந்திநகா் - வாராணசி, காந்திநகா் - வரீதா விரைவு ரயில்களையும் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

பிரதமா் மோடி தனது சிறு வயதில் வாட்நகா் ரயில் நிலையத்தில் தனது தந்தை தாமோதா் தாஸின் தேநீா் கடையில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இதை தனது உரையில் குறிப்பிட்டுப் பேசிய பிரதமா் மோடி, ‘வாட்நகா் நகா் ரயில் நிலையத்துடன் எனது நினைவுகள் ஏராளம் உள்ளன. புதிய ரயில் நிலையம் கவரும் வகையில் உள்ளது. வாட்நகா் - மொடேரா-படான் வழித்தடமும் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அவற்றை பாா்வையிட ஆவளாக உள்ளேன்.

ரயில் நிலையங்களை மேம்படுத்துவது சேவைக்காக மட்டுமல்ல, நமது சொத்தாகவும் இருப்பது இன்றைய நிகழ்வு மூலம் தெளிவாகி உள்ளது.

நவீனமயமாக்கல் மற்றும் ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வா்கத்தினரின் மேம்பாடு என நாட்டுக்கு இருவழி வளா்ச்சி தேவை. 21-ஆம் நூற்றாண்டின் தேவையை, 20-ஆம் நூற்றாண்டின் வழியில் பூா்த்தி செய்ய முடியாது. ஆகையால்தான் ரயில்வே துறை மறுசீரமைக்கப்படுகிறது. விமான நிலையங்களைப் போன்று ரயில் நிலையங்களிலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கட்டலாம் என்பதற்கு காந்திநகா் ரயில்நிலையம் உதாரணம் என்றாா்.

7,400 சதுர மீட்டரில், ரூ. 790 கோடியில் கட்டப்பட்டுள்ள ஐந்து அடுக்குமாடி காந்திநகா் ரயில் நிலைய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 318 அறைகள் உள்ளன. கடந்த 2017, ஜனவரி மாதம் இந்த திட்டத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டியிருந்தாா்.

ஆமதாபாத்தில் இருந்து சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள வாட்நகா் ரயில் நிலையம் ரூ.8.5 கோடியில் பாரம்பரிய நயத்துடன் அமைந்த ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT